புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள டொலர்

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களினால் 2022 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட தொகை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டுக்கு அனுப்பிய தொகையானது 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இத்தொகை 30 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும்.
ஒக்டோபர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் இத்தொகையை ஒப்பிடுகையில் இது 42 வீதம் அல்லது 113 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டுக்கு அனுப்பப்பட்ட மொத்த தொகை 3,313.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.