திருமணமென்றால் தெறித்து ஓடும் இளைஞர்கள்

தென்கொரியாவை சேர்ந்த இளைஞர்கள் பலரும் திருமணமென்றாலே தெறித்து ஓடுவதாக கூறப்படும் ஒரு ஆய்வு தற்போதுவெளிவந்துள்ளது.
தென்கொரியாவில் தனிநபர்களின் எண்ணிக்கை 7.2 மில்லியனாக இருப்பதாக கூறப்படும் ஆய்வுதான் இத்தகைய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன்படி மொத்தமாக தென்கொரியாவில் 2000 ஆண்டு 15.5 சதவீதமாக இருந்த திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், இந்த நிலை தொடர்ந்தால் சுமார் ஐந்தில் இரண்டு பேர் தனிநபர்களாக இருப்பார்கள் என்று தென்கொரியாவின் புள்ளியியல் விவரங்கள் கூறுவதாக ஆய்வு முடிவுகள் குறித்த செய்திகள் வலம் வருகின்றன.
தற்போது 72 லட்சம் பேர் தென்கொரியாவில் தனிநபர்களாக இருப்பதால் எதிர்காலத்தில் இந்த நிலை இப்படியான ஒரு கட்டத்தை எட்டும் என்று கணிக்கப்படுகிறது.
தற்போது சுமார் 17.6% பேர் சுமார் 30 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் திருமணமான 12 சதவீத மக்கள் குழந்தைகளை வளர்ப்பதை மிகவும் சிரமமாக கருதுவதாகவும், 25 சதவீத மக்கள் தங்களுக்கு சரியான துணையை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதாகவும், இன்னும் சிலர் துணைக்கான தேவை இருப்பதாக தாம் கருதவில்லை என்று குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
இளம் வயதினராக இருந்து திடீரென குடும்ப பொறுப்பு, நாட்டின் பொருளாதார நிதி நிலைமையை சந்திக்கும் சராசரி குடும்ப தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை சந்திக்க இருக்கும் பயத்தின் காரணமாகவே திருமணத்தை பார்த்து இப்படி இளைஞர்கள் தெறித்து ஓடுகிறார்கள்.