யாழ். மானிப்பாய் – கட்டுடையில் இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுக்க நாடவடிக்கை!

யாழ். மானிப்பாய் – கட்டுடையில் இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுக்க நாடவடிக்கை!

யாழ். மானிப்பாய் – கட்டுடையில் வாசிக்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு, இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்வாக குறித்த வீட்டிற்கான அடிக்கல் இன்றையதினம் நாட்டி வைக்கப்பட்டது.
இந்த வீட்டிற்கான அடிக்கல்லினை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் நாட்டிவைத்தார்.

51 ஆவது காலாட்படை பிரிவின் தளபதி அவர்களின் ஆலோசனைக்கு அமையொ, 513 ஆவது காலாற்படை படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 11 ஆவது காலாட்படை பிரிவினர் இந்த வீட்டினை அமைப்பதற்கான மனித வலுவினை வழங்கவுள்ளனர்.

513 ஆவது படையணியினர் அமைக்கும் 17 ஆவது வீடு இதுவாகும். அத்துடன் 11 ஆவது படைப்பிரிவினர் அமைக்கும் 14 ஆவது வீடும் இதுவாகும்.

CATEGORIES
Share This