சாப்பிட்ட போது ஏற்பட்ட இருமல்! சில நிமிடங்களில் உடைந்த பெண்ணின் எலும்புகள்: இந்த உணவு காரணமா?

சாப்பிட்ட போது ஏற்பட்ட இருமல்! சில நிமிடங்களில் உடைந்த பெண்ணின் எலும்புகள்: இந்த உணவு காரணமா?

உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென இருமல் ஏற்பட்டு அவதிப்பட்ட பெண் ஒருவரின் நான்கு விலா எலும்புகள் முறிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷாங்காய் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஹுவாங் என்ற பெண் சமீபத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது காரமான உணவினை எடுத்துக் கொண்ட நிலையில், இருமல் ஆரம்பித்துள்ளது.

கடுமையாக இருமல் ஏற்பட்ட நிலையில், திடீரென ஏதொ முறிந்தது போன்ற சத்தம் கேட்டுள்ளது. ஆனால் இதனை கண்டுகொள்ளாாமல் இருந்த . சமீபத்தில் ஹுவாங் உணவை அருந்திக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதுவும் காரமான உணவுகளை அவர் அந்த சமயத்தில் உட்கொண்டிருந்ததாக தகவல்கள் கூறும் நிலையில், இதன் காரணமாக தொடர்ந்து அவர் இருமிக் கொண்டே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடுமையாக அவர் இருமிக் கொண்டே இருந்த போது, திடீரென மார்பு பகுதுியில் முறிந்த சத்தம் கேட்டுள்ளது. ஆரம்பத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்த ஹுவாங்க்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற நிலையில், ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் ஹுவாங்கின் விலா எலும்புகள் 4 முறிந்திருப்பதை கண்டுள்ளனர்.

பின்பு மார்பு பகுதியில் கட்டு போட்டு ஒரு மாதம் ஓய்வெடுத்து தற்போது குணமடைந்த நிலையில், வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருகின்றாராம்.

இளம்பெண் ஒருவர் இருமல் ஏற்பட்டு விலா எலும்புகள் உடைந்த சம்பவம் உலகளவில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS