சக நடிகைகளை குதிரை என கேவலமாக பேசினாரா நடிகர் விஜய்? பிரபல நடிகரின் பேட்டியால் எழுந்த சர்ச்சை

சக நடிகைகளை குதிரை என கேவலமாக பேசினாரா நடிகர் விஜய்? பிரபல நடிகரின் பேட்டியால் எழுந்த சர்ச்சை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய், தன்னுடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகளை குதிரை என வர்ணித்தது பேசியதாக நடிகர் ஷாம் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பொங்கல் தினத்தையோட்டி வெளிவரவிருக்கும் வாரிசு திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் இரண்டு வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் இளைய தளபதி விஜய், சர்ச்சை கிளப்பும் வகையில் சக நடிகருடன் உரையாடிய சம்பவமொன்று இடம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஷாம் சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டிகொடுத்து விஜய்யுடன் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பேட்டியில் அவர், “ குஷி திரைபடத்தில் நடித்துக்கொண்டிருந்த போது விஜய் அண்ணாவை நான் பெயர் சொல்லி தான் கூப்பிடுவேன்.

அப்போது அவர் பேசிக் கொண்ருக்கும் போது “என்னப்பா அடுத்த சூப்பர்ஸ்டார் நீதான்னு பேசுறாங்க..? என்று கேட்டேன்” அதற்கு விஜய் அண்ணா வானத்தின் மேலே கையை காட்டினார்.

இதனை தொடர்ந்து நான் ஹீரோவாக நடிக்கும் போது விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது “ஹேய் என்னடா வரும்போதே இரண்டு குதிரைகள் ஜோதிகா மற்றும் சிம்ரனோட வர” என கேட்டார். அப்போது நான் மேலே கை காட்டினேன் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் விஜய் படத்தில் மட்டும் தான் சிங்க பெண்ணே என பாடுவார் இயற்கையில் இவ்வளவு கேவலமாக பேசியிருக்கிறாரா என கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

மேலும் பெண்களை குதிரை என வர்ணித்தது குறித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS