சந்தைக்கு வரவுள்ள அப்பிள் கார் – விலை விபரம் பற்றி தெரியுமா…!

சந்தைக்கு வரவுள்ள அப்பிள் கார் – விலை விபரம் பற்றி தெரியுமா…!

அப்பிள் தனது ‘அப்பிள் கார்’ என குறிப்பிடப்படும் மின்சார வாகனத்தை 2026 ஆம் ஆண்டு வரை தாமதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதன் விலை $1,00,000 க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதாவது இலங்கை பணத்திற்கு சுமார் 3.5 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனம், ஆதன் self-driving மின்சார வாகனத்திற்கான அதன் பார்வையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ‘டைட்டன்’ என அழைக்கப்படும் இந்த வாகனத்தின் திட்டம் கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்ததாகத் தெரிகிறது.

தொடக்கத்தில், ஐபோன் நிறுவனம் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத ஒரு காரை உருவாக்க திட்டமிட்டது, இதில் பயணிகள் ஒரு limousine-style-ல் ஒருவரையொருவர் எதிரெதிரே பார்க்கும் வகையில் அமரலாம் என கூறப்பட்டது.

ஆனால், இத்திட்டம் இப்போது நோக்கம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் ஓட்டுநர் இருக்கை, ஸ்டீயரிங் மற்றும் பெடல்களுடன் மிகவும் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த காரில் fully autonomous driving அல்லது self-driving அம்சம் இருக்காது, ஆனால் நெடுஞ்சாலைகளில் தானாகவே ஓட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

சாலையில் வாகனம் ஓட்டும்போது பயனர்கள் கேம்களை விளையாடுவதற்கு அல்லது காணொளிகளை பார்ப்பதற்கு போதுமான அளவிற்கு சுயமாக இயங்கும், ஆனால் அதிக ட்ராபிக் அல்லது மோசமான வானிலையின் போது அவ்வாறு இயங்காது என கூறப்படுகிறது.

இந்த வாகனத்திற்கான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் காரின் விலை முதலில் எதிர்பார்க்கப்பட்ட $120,000க்கு பதிலாக $100,000க்குக் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது.

வாகனத்தின் வடிவமைப்பு இன்னும் நிறுவனத்தால் வேலை செய்யப்பட்டு வருகிறது, ஆனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அது முடிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து, காருக்கான அம்சங்களின் பட்டியல் 2024-ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2026 ஆம் ஆண்டின் வெளியீட்டிற்கு முன்னதாக 2025 ஆம் ஆண்டில் சோதனை தொடங்கும் எனவும் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS