சமையலறை ஒரு நாட்டிலும் – வீட்டின் ஹோல் மற்றொரு நாட்டிலும் – நடுவில் பிரதான வீதி -இந்தியாவில் இப்படி ஒரு எல்லை கிராமம்

சமையலறை ஒரு நாட்டிலும் – வீட்டின் ஹோல் மற்றொரு நாட்டிலும் – நடுவில் பிரதான வீதி -இந்தியாவில் இப்படி ஒரு எல்லை கிராமம்

சமையலறை ஒரு நாட்டிலும் வீட்டின் முன் ஹோல் மற்றுமொரு நாட்டிலும் உள்ள விநோத சர்வதேச எல்லை இந்தியாவின் ஒரு கிராமத்தில் இருக்கும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வடகிழக்கு இந்திய மாநிலமான நாகலாந்திலேயே இந்த நிலை உள்ளது.மியான்மர் எல்லையில் அமைந்துள்ளது நாகலாந்து. பல்வேறு பழங்குடி இன மக்களின் பூர்வீக பூமியாகவும் கருதப்படுகிறது. இங்குள்ள லாங்வா எனும் கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்திய மற்றும் மியான்மர் குடியுரிமையை பெற்றுள்ளனர்.

இந்திய மியான்மர் எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் வழியே சர்வதேச எல்லைக்கோடு செல்கிறது. எனினும் கிராம மக்கள் ஒற்றுமையாக இருப்பதால் எப்போதும் போல அவர்கள் சகஜமாக கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை நிர்வகிக்கும் கிராமத் தலைவரின் வீட்டின் வழியாகவே சர்வதேச எல்லைக்கோடு செல்கிறது.

அதாவது வீட்டின் ஒரு பகுதி இந்தியாவிலும் மற்றொரு பகுதி மியான்மரிலும் அமைந்திருக்கிறது. நாகலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் இந்த கிராமம் உள்ளது. கிராம தலைவர் ஆங் என அழைக்கப்படுகிறார். மோன் மாவட்டத்தில் மொத்தம் 7 ஆங் உள்ளனர். ஒவ்வொரு ஆங்கிற்கு கீழும் சில கிராமங்கள் உள்ளன. இவற்றுள் சில அருணாச்சல பிரதேசம் மற்றும் மியான்மர் எல்லையில் அமைந்திருக்கின்றன.

இந்தியாவை பொறுத்தவரையில் இரட்டை குடியுரிமை என்பது கிடையாது. இந்தியர் ஒருவர் வேறு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்கள் இந்திய குடியுரிமையை தானாகவே இழந்துவிடுவர். இதுவே லாங்வா கிராமத்தின் விசேஷமாகவும் பார்க்கப்படுகிறது.

இங்கே, கொன்யாக் நாகா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழ்கின்றனர். மனிதர்களை வேட்டையாடும் பழங்குடி இனமாக கருதப்படும் கொன்யாக் மக்கள் 1960 களுக்கு பிறகு அந்த வழக்கத்தை கைவிட்டதாக தெரிகிறது. அப்பகுதியின் வளத்திற்கு இந்த பழங்குடி இன மக்களும் முக்கிய காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

CATEGORIES
Share This

COMMENTS