கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் பொலிசார் மேற்கொண்ட திடீர் வீதி சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உடமையில் வைத்திருந்த 900 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் பதினையாயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டதுடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி, ஜஸ் போதப்பொருள் பயன் படுத்தும்போது படமாக்கப்பட்ட படத்தட்டு ( சிடி) ஆகியனவும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS