பிரதமர் பதவியை ஏற்குமாறு மைத்திரிக்கு சென்ற அழைப்பு! மூன்று மாதங்களில் தடைகளை நீக்கிய ரணில்

பிரதமர் பதவியை ஏற்குமாறு மைத்திரிக்கு சென்ற அழைப்பு! மூன்று மாதங்களில் தடைகளை நீக்கிய ரணில்

முன்னதாக சஜித் பிரேமதாச, மைத்திரிபால மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அனைவரும் சவாலை ஏற்க மறுத்து விட்டனர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும், கட்சி இரண்டாவதாக இருக்க வேண்டும். இத்தருணத்தில் பொருளாதாரத்தையும் நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எம்மால் எடுக்கப்பட்ட கூட்டுத் தீர்மானமாகும்.

ஒரு அரசியல்வாதி அல்லது ஒரு அரசியல் கட்சியின் பார்வை, ஆட்சிக்கு வருவதற்கான குறுக்குவழிகளைக் கண்டுபிடிப்பதாக இருக்கக் கூடாது.

ஆனால் நாம் நாட்டுக்காக தியாகம் செய்து ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதைச் செய்துள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது ஆதரவை வழங்குவதே இந்த தருணத்தில் உகந்ததென நாம் உறுதியாக நம்புகின்றோம்.

முன்னதாக சஜித் பிரேமதாச, மைத்திரிபால மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அனைவரும் சவாலை ஏற்க மறுத்து விட்டனர்.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்து சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே, நாம் அவருக்கு ஆதரவளித்து, அவர் சிறப்பாக செயல்படுகிறாரா என்பதைப் பார்க்க அவருக்கு உரிய காலத்தையும் வழங்க வேண்டும்.

என்னுடைய தனிப்பட்ட பார்வையில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். கடந்த மூன்று நான்கு மாதங்களில் பல தடைகளை அவர் நீக்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS