பரிதமாக உயிரிழந்த 2 குழந்தைகள்..! யாழில் இடம்பெற்ற துயரச் சம்பவம்

பரிதமாக உயிரிழந்த 2 குழந்தைகள்..! யாழில் இடம்பெற்ற துயரச் சம்பவம்

தாய்பால் புரையேறியதில் 3 மாத குழந்தை ஒன்று மரணடைந்துள்ளது.

யாழ்.மருதனார்மடத்தில் நேற்று காலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோகிலன் சாரோன் என்ற 3 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது.

அவரின் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்று இருந்த பொழுது குழந்தை வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் காலை 9.00 மணி அளவில் குழந்தை காணாது பெற்றோர் தேடிய போது தேவாலயத்தின் குளியலறைக்குள் இருந்த 20 லீட்டர் வாளிக்குள் மூழ்கிய நிலையில் 10.30 மணியளவில் மீட்கப்பட்டு குறித்த குழந்தை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (06) காலை 6.00 மணியளவில் குழந்தை உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS