120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு

120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு

120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு செலவுத் திட்டம் குறித்த வாக்கெடுப்பு நாளை (08.12.2022) நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும்.

பிரிவிணைகள் ஏற்பட்டால் நாடு மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும்.

சுதந்திரம் கிடைக்கப் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையிலும், நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட உள்ள தலைவர்கள் படுகொலை செய்யப்படும், படுகொலை செய்ய முயற்சிக்கப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க அனைத்து இனத் தலைவர்களும் இணைந்து செயற்பட்டதால் வெற்றி கண்டதாகவும் அதன் பின்னர் பிளவடைந்து விட்டது.

இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தேசிய ரீதியில் நெருக்கடியான நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டின் எதிர்காலத்திற்கான தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS