HIV AIDS விழிப்புணர்விற்கு ஏன் சிகப்பு ரிப்பன் பயன்படுத்தப்படுகின்றது?

எயிட்ஸ் நோயினால் உயிரிழந்தவர்களை நினைவுபடுத்தும் வகையில் சிகப்பு ரிப்பன் அணியப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1ம் திகதி உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
நோய் அறிகுறி, அதற்கான காரணிகள், தடுப்பு வழிமுறைகள் என்பன தொடர்பில் இந்த தினத்தில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்படுகின்றது.
எச்.ஐ.வீ தொற்று உறுதியானவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் இவ்வாறு சிகப்பு ரிப்பன் அணியப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் நிர்க்கதி நிலையை விபரிக்கும் வகையிலும், இரத்தத்தினால் பரவுவதனாலும் இந்த சிகப்பு ரிப்பன் அணியப்படுகின்றது.
எவ்வாறெனினும், 1988ம் ஆண்டில் Visual AIDS என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தைச் சேர்ந்த சில கலைஞர்கள் மூன்றாண்டுகளின் பின்னர் 1991ம் ஆண்டில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களை பராமரிப்பவர்களுக்கும் கருணை காட்டும் நோக்கில் ஒர் குறியீடு ஒன்று வடிவமைக்கப்பட்டது.
கல்ப் போரில் பங்குபற்றிய அமெரிக்கப் படைவீரர்கள் மஞ்சள் ரிப்பனைப் போன்று, சிகப்பு ரிப்பன் உருவாக்கப்பட்டது.
UNAIDS என்ற நிறுவனம் சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட இந்த நிறுவனம் Red Ribbon Project என்னும் திட்டத்தை ஆரம்பித்தது.
அன்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த சிகப்பு ரிப்பன் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது