இதை மட்டும் கொடுங்க! குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி கடகடவென அதிகரிக்கும்

இதை மட்டும் கொடுங்க! குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி கடகடவென அதிகரிக்கும்

நம் உடலில் தேவையில்லாத வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் போது, இவைகளுக்கு எதிராக உடலின் உள்ளே இருந்து போராடும் தன்மையை தான் நோய் எதிர்ப்பு சக்தி என்கிறோம்.

இயற்கையாகவே இது நம் உடலில் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருந்த போதிலும், தாய்ப்பால், உண்ணும் உணவுகள் மூலம் இது மேலும் பலப்படுகிறது.

ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் குறையத் தொடங்கினால் நோய்கள் எளிதில் அண்டிக்கொள்ளும்.

இதனால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் உட்பட இன்னும் பல தொந்தரவுகளுக்கு ஆளாகலாம்.

இந்த பதிவில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
ஆரஞ்சு- 1
கேரட்- 3 (சிறியது)
ஆப்பிள்- 1
இஞ்சி- சிறிதளவு
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன் (தேவைப்படின்)

கேரட், ஆப்பிள் இரண்டையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

இதனுடன் ஆரஞ்சு, துருவிய இஞ்சி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.

இறுதியாக மிக்ஸி ஜாரில் இருந்து வடிகட்டினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் தயாராகிவிடும்.

கடைசியில் இதனுடன் சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குறிப்பு- 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த பானத்தை குடிக்க கொடுக்கலாம், குழந்தையின் வயதுக்கு 5 டேபிள் ஸ்பூன்களில் இருந்து அதிகரித்துக் கொடுக்கலாம்.

CATEGORIES
Share This

COMMENTS