மின்சார சபையின் நஸ்டத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை – 06 மணிநேர மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்

மின்சார சபையின் நஸ்டத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை – 06 மணிநேர மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்

மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாளாந்தம் சுமார் 06 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று(5) அமைச்சரவையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதை தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் மின்சார சபையின் நஸ்டத்தைக் குறைக்க மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை அதிகரிக்காமல் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாளாந்தம் சுமார் 06 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.எவ்வாறாயினும், குறித்த கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாமலேயே கலந்துரையாடல் நிறைவடைந்துது.”என தெரிவித்திருந்தார்.

CATEGORIES
Share This