வேலை இன்றி கோடி சம்பளம் நிறுவனம் மீது ஊழியர் வழக்கு

வேலை இன்றி கோடி சம்பளம் நிறுவனம் மீது ஊழியர் வழக்கு

தனக்கு வேலை எதுவும் தராமல் ஆண்டுக்கு 1.3 கோடி சம்பளமாக தருவதாக தெரிவித்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் ஊழியர் ஒருவர்.

ஐரிஸ் நாட்டில் டப்ளினில் பணியாற்றி வரும் ரயில் ஊழியர் ஒருவரே நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெர்மோட் அலாஸ்டர் மில்ஸ் என்ற ஊழியர் ரயில் நிறுவனத்தின் நிதி மேலாளராக பணியாற்றி வருகிறார். மில்ஸ் 2010ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றதாகவும், ஆனால் அவருக்கு 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மூன்று மாதங்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.

ஆனால் அவர், அதே அந்தஸ்து, அதே சீனியாரிட்டி மற்றும் அதே பதவியில் இருப்பார்” என்ற ஒப்பந்தத்திற்குப் பிறகு மீண்டும் நிறுவனத்திற்குத் திரும்பினார். இந்த நிலையில் தற்போது தனது திறமைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்று தனது முதலாளிகள் மீதே வழக்கு தொடர்ந்துள்ளார்.

நான் மீண்டும் வேலைக்கு திரும்பிய பின்னர் அனைத்து வேலைகளில் இருந்தும் நான் ஒதுக்கப்பட்டு சும்மாவே இருப்பது சலிப்பாக இருக்கிறது. விசில் அடித்த பிறகு செய்ய வேண்டிய வேலை எதுவும் இல்லை என்றும், ஆனால் ஆண்டுக்கு 105,000 பவுண்டுகள் (ரூ. 1.03 கோடி) சம்பளமாக பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

டெய்லி மெயில் வழங்கிய கூடுதல் தகவலில் இரண்டு நாட்கள் மற்றும் வீட்டில் இருந்து மூன்று நாட்கள் வேலை செய்கிறார். அவர் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்குச் சென்று இரண்டு செய்தித்தாள்கள் மற்றும் ஒரு சாண்ட்விச் வாங்குகிறார். அவர் செய்தித்தாள்களைப் படித்து சாண்ட்விச் சாப்பிடுகிறார். அரை மணி நேரம் களித்து, அவருக்கு மின்னஞ்சல் வந்தால், அவர் அதற்குப் பதிலளித்து, தேவைப்பட்டால் அதனுடன் தொடர்புடைய வேலையைச் செய்கிறார். அவர் மதிய உணவு சாப்பிட்டு, நடந்து சென்று, பிற்பகல் 2.30 முதல் 3 மணிக்குள் அலுவலகத்திற்குத் திரும்புகிறார், பின்னர் எதுவும் இல்லை என்றால் வீட்டிற்குச் செல்கிறார்.

இது தொடர்பாக டெர்மோட் அலாஸ்டர் மில்ஸ் தெரிவித்த தகவலில் “நான் என் அறைக்குள் செல்கிறேன், நான் என் கணனியை இயக்குகிறேன், மின்னஞ்சல்களைப் பார்க்கிறேன். வேலையுடன் தொடர்புடைய மின்னஞ்சல்கள் இல்லை, செய்திகள் இல்லை, தகவல் தொடர்புகள் இல்லை, சக ஊழியர் தொடர்புகள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS