தாயகத்தின் பெரும் செல்வத்தை டொலர்களாக சுருட்டப்போகும் இந்தியா

தாயகத்தின் பெரும் செல்வத்தை டொலர்களாக சுருட்டப்போகும் இந்தியா

காற்றாலை மின் உற்பத்தி ஊடாக எமது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய பெரும் செல்வம் மன்னார் பூநகரியைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் காணப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய மின்சார அமைச்சு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் இருந்து 30,000 மெகாவோட்டும், எல்லையில் உள்ள இந்திய கடல் பகுதியில் இருந்து மேலும் 30,000 மெகாவோட்டும் உற்பத்தி செய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

தற்போது இலங்கையின் நாளாந்த மின் உற்பத்தி திறன் சுமார் 4300 மெகாவோட்களாகும்.

இப்பகுதியில் உள்ள ஆழம் குறைந்த கடலில் கட்டப்படும் காற்றாலை மின் நிலையங்களில் இருந்து ஏழு மடங்கு அதிக ஆற்றலை உற்பத்தி செய்து, அதிகப்படியான உற்பத்தியை சர்வதேச அளவில் விற்பனை செய்து பெரும் டொலர் வருமானம் பெற முடியும் என அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

ஆய்வு அறிக்கை ஒருபுறம் இருக்க, இந்தியப் பகுதியில் காற்றாலை மின் நிலையங்கள் அமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அந்நாடு ஏற்கெனவே தயாரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி எரிசக்தி உற்பத்தியாளர்களில் ஒருவரான அதானி, தாங்கள் தொடங்கவிருக்கும் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக பல முன்னணி நிறுவனங்களால் இந்த பிராந்தியத்தில் ஆராய்ச்சியும் நடத்தியது.

யாழ்ப்பாணத்தின் பூநகரி பகுதியில் 500 மெகாவோட் காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

ஒரு மெகாவோட் மின்சாரம் தயாரிக்க அவர்கள் முதலீடு செய்யும் தொகை ஒரு மில்லியன் டொலர்கள் என்று இந்திய அறிக்கைகள் காட்டுகின்றன.

இந்தியாவைத் தவிர, ஜப்பானும் இந்த அறிக்கையை ஆய்வு செய்து எதிர்காலத்தில் தகுந்த முதலீட்டு திட்டங்களை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

CATEGORIES
Share This