எலிகளை பிடிக்க ஆலோசனை கூறினால் ரூ.1 கோடி.. மேயர் அறிவிப்பு

எலிகளை பிடிக்க ஆலோசனை கூறினால் ரூபாய் 1.13 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என நியூயார்க் மேயர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில மாதங்களாக எலிகள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனை அடுத்து நியூயார்க் நகர நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுக்க உள்ளது. எலிகளை பிடித்துக் கொல்பவரை வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் எலிகளை கட்டுப்படுத்த ஆலோசனை தருபவர்களுக்கு 1.13 கோடி ரூபாய் வழங்கப்படும் என நியூயார்க் மேயர் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை தருபவர்கள் அனைத்து துறைகளிலும் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் டிகிரி படித்து இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
CATEGORIES Viral News