ரணில் ஏன் நல்லவரானார் – மகிந்த வெளியிட்ட இரகசியம்

தன்னைப் போன்ற நல்ல மனிதர்களால் சூழப்பட்டிருப்பதன் காரணமாகவே அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று முன்னேறியிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தம்மைப் போன்ற விவசாயக் குடியேற்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் முன்மொழிவுகளை கருத்திற்கொண்டு அதிபர் ரணில், நெல், விவசாயம் உள்ளிட்ட விவசாயத்திற்கு ஆதரவை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தன்னைப் போன்றவர்கள் அருகில் இல்லை என்றால் அதிபர் ரணில் விக்ரமசிங்க நெற்செய்கையை புறக்கணித்து நாட்டிலிருந்து முன்பு போல் அரிசியை கொண்டு வந்திருப்பார் என்றும் அவர் கூறினார்.
CATEGORIES செய்திகள்