ராஜபக்சர்களின் நள்ளிரவு இரகசிய ஒப்பந்தம்! ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

ராஜபக்சர்களின் நள்ளிரவு இரகசிய ஒப்பந்தம்! ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அமெரிக்க நிறுவனமான நியூ ஃபோர்ட்ரஸ் நிறுவனத்துடன் அரசாங்கம் நள்ளிரவில் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை மீண்டும் தொடர தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் அமெரிக்க நிறுவனமான New Fortress Company உடன் நள்ளிரவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அந்த காலப்பகுதியில் எரிசக்தி அமைச்சராக இருந்த உதய கம்மன்பில, கைத்தொழில் அமைச்சராக விமல் வீரவன்ச ஆகியோர் இந்த ஒப்பந்தத்திற்கு கடும் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கெரவலப்பிட்டியில் அமைந்துள்ள தேசிய மின்னுற்பத்திக் கட்டமைப்பின் மிக முக்கிய விநியோக மத்திய நிலையமான யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவிற்குச் சொந்தமான நியூ ஃபோர்ட்ஸ் எனெர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த அரசாங்கத்தினால் 2021ஆண்டில் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.06 மணிக்குக் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This