மொட்டு உறுப்பினர்கள் 40 பேருக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி

மொட்டு உறுப்பினர்கள் 40 பேருக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசன அமைப்பாளர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தலை இலக்காக கொண்டு தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆசன அமைப்பாளர்களாக பதவியேற்கவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது ஆசன அமைப்பாளர் பதவிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி, ஆசன அமைப்பாளர் பதவிக்கு இதுவரை சுமார் 1000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This