புலம்பெயர்ந்த இலங்கையர்கள் அனுப்பும் பணம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

புலம்பெயர்ந்த இலங்கையர்கள் அனுப்பும் பணம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு பணியாற்றிவரும் இலங்கை பணியாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே இதனை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அனுப்பப்படும் பணத்துக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் பலவந்தமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படுவதாகவும் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையென மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணி பணத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நாணயமாக வைத்திருக்கலாம் அல்லது அவர்களின் விருப்பப்படி இலங்கை ரூபாவாக மாற்றிக்கொள்ளலாம் எனவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS