உரும்பிராயில் கசிப்பு குகை முற்றுகை!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குபட்ட உரும்பிராய் – விளாத்தியடி பகுதியில் சகிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று (2) முற்றுகையிடப்பட்டது.
இதன்போது 4 இலட்சத்து 20 ஆயிரம் மில்லிலீட்டர் கோடாவுடன் 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
CATEGORIES செய்திகள்