டிக் டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

டிக் டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிக் டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(01.12.2022) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார்.

இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் டிக் டாக் எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்துள்ளனர்.

இதேவேளை இரண்டு இளைஞர்களுமே எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS