இலங்கை பிரச்சினையில் இந்தியாவுடன் சேர்ந்து செயற்படும் இங்கிலாந்து

இலங்கை பிரச்சினையில் இந்தியாவுடன் சேர்ந்து செயற்படும் இங்கிலாந்து

இலங்கையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க தமது நாடு, இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சிய பிரபுக்கள் சபையில் இலங்கை விவகாரம், குறிப்பாக பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் விவகாரம் குறித்து அண்மையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, பிரபுக்கள் சபை உறுப்பினர்களால் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் பதிலளித்துள்ளார்.

தனது பதிலில் அவர், இலங்கையின் விடயத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் இங்கிலாந்து தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் நிலவும் மனிதாபிமான பிரச்சினையை எதிர்கொள்ள பிரித்தானியாவும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This