தமிழர் பகுதியில் நடந்த இரட்டைக் கொலை! குற்றவாளிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த கடுமையான உத்தரவு

தமிழர் பகுதியில் நடந்த இரட்டைக் கொலை! குற்றவாளிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த கடுமையான உத்தரவு

வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன், இறந்தவரின் நகைகளை கொள்ளையடித்தவர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்ட அதே குற்றவாளிக்கு மேலும் 20 ஆண்டுகள் கடூளிய சிறைத்தண்டணை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ் வழக்கு விசாரணை இன்று எடுத்துகொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெட்டிக் கொலை
சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் 19.01.2012 மிகவும் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு விரல்களில் இருந்து மோதிரங்களை அகற்றுவதற்காக விரல் வெட்டி துண்டிக்கப்பட்டு, தலையில் ஆயுத்ததால் தாக்கப்பட்டு மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டது.

முதலாவது சந்தேகநபரிடம் இருந்து இறந்தவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

அனைத்து சாட்சிகளையும் பரிசித்த நீதிமன்றம் முதலாம் கொலையாளியை இரட்டை கொலை வழக்கின் குற்றவாளி எனவும் இறந்தவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த குற்றத்திற்காக குற்றவாளியென தீர்ப்பளித்த நீதிமன்றம் இரட்டை மரண தண்டனை விதித்ததுடன், 20 ஆண்டுகள் கடூளிய சிறைத்தண்டணை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

முதலாம் சந்தேகநபரின் சகோதரரான இரண்டாம் சந்தேகநபர் அனைத்து குற்றஞ்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்யப்பட்டார். மேலும், நீதிமன்றத்தின் அனைத்து விளக்குகளும் அனைக்கப்பட்டு மரண தண்டணை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி விரும்பும் நேரம் விரும்பும் இடத்தில் மரண தண்டணையை நிறைவேற்றுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

CATEGORIES
Share This