இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம்!விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என இலங்கை அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர் மூத்த அதிகாரி ஃபெடரல் பொலிஸ் றோபர் வில்சன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் பொலிஸார், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். எனவே சட்டவிரோத ஆட்கடத்தல்காரரிடம் உங்கள் பணத்தையும் உயிரையும் பயணம் வைத்து பயணிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜ.பி.ரி சுகதபால தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்குள் இலங்கையில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல்காரர் ஊடாக குடியேற முயற்சித்தனர்.இவர்களை அவுஸ்திரேலியா பொலிஸார் மற்றும் கடற்படையினர் கைது செய்து திருப்பி அனுப்பினர்.
இலங்கை பொலிஸாருடன் அவுஸ்திரேலியா பொலிஸார் இணைந்து இந்த ஆட்கடத்தல் கும்பல் தொடர்பாக தகவல் பரிமாறவுள்ளதுடன், ஆட்கடத்தல் காரர்களை கைது செய்து சட்டத்துக்கு முன் நிறுத்த இரண்டு நாட்டு பொலிஸாரும் கூட்டாக செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.