நாட்டில் தூசி துகள்களின் அளவு அதிகரிப்பு – தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டில் தூசி துகள்களின் அளவு அதிகரிப்பு – தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டின் வளிமண்டலத்தில் உள்ள தூசி துகள்களின் அளவு தற்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பைவிட அதிக அளவை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய நகரங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக அந்த அமைப்பின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் வரை இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரித்து, நாட்டின் வளிமண்டலத்தை பாதிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This