மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரமாக செலவு செய்த ராஜபக்ஷர்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களுக்காக பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளதாக தகவலறியும் சட்டம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்மைகய கடந்த வருடம் 5 வெளிநாட்டு விஜயங்களுக்கு 44 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டு 2 வெளிநாட்டு விஜயங்களுக்கு 36 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 3 வெளிநாட்டு விஜயங்களுக்கு சுமார் 7 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார். முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
அவரது சகோதரரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் மற்றும் இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.