சீனாவின் இழுத்தடிப்பு?

சீனாவின் ஒரே பட்டி மற்றும் மண்டலம் முன்முயற்சி (பிஆர்ஐ) அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுவது போல் இலாபகரமானது அல்ல.
ஆறு நாடுகளில் காணப்படும் நிலைமைகளோடு, இந்தோனேஷியா, மியான்மர், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் காணப்படும் பத்து திட்டங்களும் அதனை நியாயப்படுத்த போதுமானதாக உள்ளது.
இவ்வாறிருக்கையில், சீனாவின் ஒரே பட்டி மற்றும் மண்டலம் முன்முயற்சியின் பங்காளிகளும், பயனாளிகளும் தங்கள் கடனைச் செலுத்துவதற்கு ஆதாரங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நிக்கலஸ்காசி மற்றும் கிளிபோர்ட் குரஸ் போன்ற வல்லுநர்கள் சீனாவின் குறித்த திட்டத்திற்கு பின்னால் உள்ள இரட்டை நோக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதற்கு அமைவாக, ‘ஈக்வடாரின் மிகவும் மதிப்புமிக்க ஏற்றுமதியான எண்ணெயில் 80 சதவீதத்தை சீனா வைத்திருக்கிறது.
ஏனெனில் அந்நாடு கடன்களுக்காக பெற்றோலியத்துறையில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு கடன்றகள் மீளச் செலுத்தப்படுகின்றன’ என்று குறிப்பிடுகின்றனர்.
சாம்பியாவானது நாட்டின் மொத்தக்கடனில் மூன்றில் ஒரு பகுதி சீனாவினுடையதாக உள்ளது.
இதற்காக சீனா அந்நாட்டின் சுரங்க சொத்துக்களை பிணையமாக எடுத்துக்கொண்டுள்ளது. இவ்வாறு பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும்.
மிக முக்கியமாக பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை சீனாவின் கடன்களாலும், அந்நாடு கடன்களை மறுசீரமைப்பதற்கு இழுத்தடிப்பதாலும் நாளுக்கு நாள் சிக்கலான நிலைமைகளுக்குச் சென்றுகொண்டிருக்கின்றது.
எலிசபெத் சி. எகானமி தனது தி வேல்ட் டு சைனா என்ற புத்தகத்தில், ‘இலங்கை அதன் கடனைச் செலுத்த முடியாமையால் அதற்குப் பதிலாக சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு பெற்றுக்கொண்டுள்ளது.
இது அர்த்தமற்ற முடிவாக இருந்தாலும் இலங்கையின் அரசியல் உயரடுக்குகள் தங்கள் அரசியல் பிழைப்பை மட்டுமே மனதில் கொண்டிருந்தனர்.
இதனால் பலவீனமான மற்றும் ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தினை மாற்றாது, இருந்தமையால் சீனா தனது கால்களைப் வலுவாகப் பதிப்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பை சீனா கண்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எழுச்சிக்குப் பின்னர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன 99 வருட அம்பாந்தோட்டை ஒப்பந்தம் ‘இன்னும் ஒருமுறை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு நீடிக்கலாம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் உள்ளன.
அதாவது 99 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தொடரலாம் என்பதாகும்
2015ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க சில முயற்சிகளை எடுத்தார்.
குறிப்பாக, எனினும், சீனத் திட்டத்தையும் ஊழல்களை காரணம் காண்பித்து விசாரணைக்கு உட்படுத்தவோ முடியாது என்பதை அவர் அப்போது தான் தெரிந்துகொண்டார்.
அந்தவகையில் சீனாவின் ஒரே பட்டி மற்றும் மண்டலம் முன்முயற்சி சீனாவின் எந்தவொரு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் மீளப் பெறச் செய்வதென்பது இயலாத காரியமாகின்றது.
அத்துடன், உலகத்தில் உள்ள பல நாடுகளுக்கு இலங்கை விவகாரம் மிகச்சாரியானதொரு எச்சரிக்கையாகும்.
இது பெரும்பாலும் சக்திக்குமீறிக் கடன் வாங்குதல் உட்பட இதர செலவீனங்களால் எற்படும் நிலைமைகளை வெளிப்படுத்துகின்றது.
சீனாவைப் பொறுத்தவரையில். கடன் பொறி மற்றும் மூலோபாயப் பொறி ஆகிய இரண்டு பொறிகளை தற்போது இலங்கை மீது, திறம்பட விரித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் சமநிலைப்படுத்தப்பட்ட வெளியுறவுக் கொள்கையை பின்பற்றாது சீனாவின் பங்கம் சாய்ந்திருந்தது. இது அந்நாட்டு இலங்கை மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிசமைத்தது.
இதுவே, நாடு பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்குதவற்கு வழிசமைத்தது. முதலில் உர விடயத்தில் இலங்கைடயுன் முட்டிக்கொண்ட சீனா இறுதியில் உரத்தின் தரம் உறுதிப்படுத்தப்பட்டு அது சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் இறகுமதி செய்யப்படாது 6மில்லியன்களை தண்டப்பணமாகப் பெற்றுச் சென்றது.
அப்போது கூட, இலங்கையின் பொருளாதார நிலைமைகள் சரிந்து கொண்டிருந்த போதும் சீனா அதரனை கருத்திற் கொள்ளவில்லை.
இவ்வாறான நிலையில், தற்போது, இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் டொலர்களாகும்.
அதில் இறையாண்மைக் கடன்கள் 35 பில்லியன் டொலர்கள் என்று கடந்த வாரம் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
இதில், இருதரப்பு கடன்கள் 10.9 பில்லியன் டொலர்கள், பலதரப்பு கடன் 9.3 பில்லியன் டொலர்கள், வணிக கடன்கள் 14.8 பில்லியன் டொலர்கள் ஆகும்.
இதில் சீனா மட்டும், 7.1 பில்லியன் டொலர்கள் கடன்களை வழங்கியிருக்கிறது.
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன்களில், இது 20சதவீதம் ஆகும்.
இலங்கைக்கு கடன்களை வழங்கியுள்ள, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும், ஒரே கோட்டில் வந்து நின்றிருந்தால், டிசம்பருக்குள், இலங்கைக்கு முதற்கட்ட நிதியை சர்வதேச நாணய நிதியம் விடுவிக்கும்.
ஆனால் சினா இன்னமும் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இழுத்தடிப்பையே செய்து கொண்டிருக்கின்றது இது இலங்கையின் நிலைமைகளை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும்.