முதன்முறையாக இன்ஸ்டாவில் இணைந்த ஷாலினி அஜித்குமார்

முதன்முறையாக இன்ஸ்டாவில் இணைந்த ஷாலினி அஜித்குமார்

முன்னணி ஹீரோக்கள் அனைவருமே டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி இருக்கும் நிலையில் அஜித் குமார் மட்டும் சோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் மனைவியான ஷாலினி அஜித்குமார் முதன்முறையாக, இன்ஸ்டாவில் தற்போது இணைந்து இருக்கிறார். சமீபத்தில் ஷாலினி தனது பிறந்த நாளை கொண்டாடிய போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் முதல் பதிவாக வெளியிட்டு உள்ளார். அதற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில் 33 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் அவரை பாலோ செய்கிறார்கள். அதோடு அஜித் நடிக்கும் திரைப்படங்களின் அப்டேட்டுகளையும் பதிவிடுமாறு அவருக்கு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

CATEGORIES
Share This

COMMENTS