சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தற்போது 26,000க்கும் அதிகமான கைதிகள் இருப்பதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 10,000 ஆகும். சந்தேகத்தின் பேரில் 16,000 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகளில் 74 சதவீதமானோர் போதைப் பொருள் குற்றத்துடன் தொடர்புடையவர்களாவர்.
இவர்களில் 4,600 பேர் கைதிகள் என்பதுடன் 8,700 பேர் சந்தேக நபர்களாவர்.
CATEGORIES செய்திகள்