நோய் எதிர்ப்பு சக்தியை சூப்பராக வேலை செய்ய வைக்கும் சூப்! 10 நிடங்களில் செய்யலாம்

நோய் எதிர்ப்பு சக்தியை சூப்பராக வேலை செய்ய வைக்கும் சூப்! 10 நிடங்களில் செய்யலாம்

பொதுவாக வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறை சரி கஞ்சி மற்றும் சூப் வகைகள் செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு கொடுப்பது நல்லது.

இது அதிக ஊட்டச்சத்துக்களையும் நோய் நிலைமைகளுக்கான நிவாரணத்தை தருகிறது இதன்படி, அவையனைத்தையும் ஒரே தரக்கூடிய கீரை வகைகளுள் வல்லரையும் ஒன்று.

இதனை உணவில் சேர்ப்பதன் மூலம் பல நோய் நிலைமைகள் சரி செய்யப்படுகிறது.

உதாரணமாக உடவிலுள்ள தேவையற்ற கட்டிகள், வயிற்றுப் புண்கள், செரிமாண பிரச்சினைகள் மற்றும் சளி பிரச்சினை போன்றவைகளை குறிப்பிடலாம்.

ஏனெனில் வல்லாரையில் அதிகமான இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் போன்றவைகள் உள்ளடங்கியிருப்பதால் இரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

அந்த வகையில் வல்லாரைக் கொண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சூப்பரான சூப் எவ்வாறு செய்வது குறித்துதெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்
வல்லாரை கீரை – 1 கப்

பாசிப்பருப்பு – 1 டீஸ்பூன்

பூண்டு – 4

சின்னவெங்காயம் – 10

மிளகு – சிறிது சீரகம் – சிறிது

வெண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

பட்டை – 1

லவங்கம் – 1

10 நிமிடங்களில் செய்வது எப்படி?
முதலில் வல்லாரை கீரை, வெங்காயம் என்பவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் தொடர்ந்து மிளகு, சீரகத்தை பொடியாக இடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, இது சூடாகியதும் அதில் பட்டை, லவங்கம், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதங்க விட வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பருப்பு, கீரை சேர்த்து சுமார் 2 நிமிடங்கள் வதங்க விட வேண்டும். பின்னர் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து கீரையை நன்றாக வேக வைக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து வேக வைத்த கீரையை நன்றாக மசித்து, அதில் வெண்ணெய், உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கினால் சூப்பரான வல்லாரை சூப் தயார்!

CATEGORIES
Share This

COMMENTS