எங்கு போனாலும் இடிக்கிறது… பெரிய மார்பை குறைக்க நிதி திரட்டி வரும் பெண்

எங்கு போனாலும் இடிக்கிறது… பெரிய மார்பை குறைக்க நிதி திரட்டி வரும் பெண்

இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கில் வசித்து வருபவர் ஜாஸ்மின் மெக்லெட்சி (வயது 33). கேக், ரொட்டி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் பால் வில்லியம்ஸ் (வயது 51). இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளது. கணவர் தரையில் விரிப்பு, கம்பளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். ஜாஸ்மின் சிறு வயதில் பள்ளிக்கு போகும்போதே உடல் பருமனுடன் காணப்பட்டு உள்ளார். அவருடன் படிக்கும் சக மாணவிகள் உடல் பருமனை விட அவரது பெரிய மார்பை கிண்டல் செய்துள்ளனர். இதனால், ஜாஸ்மின் மனவேதனை அடைந்து உள்ளார்.

அவர் உடை மாற்றும் அறைக்கு சில மாணவிகள் வந்து அவரது மார்பை உற்று பார்த்துள்ளனர். அவரை சீண்டியும் உள்ளனர். அது பயங்கரம் நிறைந்தது என ஜாஸ்மின் கூறுகிறார். எனது வயது மற்றும் பிற மாணவிகளிடம் ஒப்பிடும்போது அது சற்று பெரியது. அதனால், அதிக துன்பமடைந்தேன். என்னை விமர்சிப்பவர்களும் தரக்குறைவான சொற்களை பயன்படுத்தினர். மாணவர்களிடம் இருந்தும் தேவையற்ற பார்வையை பெற்றேன் என கூறுகிறார்.

சற்று வயது கடந்து, மகள் பிறந்த பின்னர் அவரது உடல் மற்றும் மார்பு இன்னும் பருமன் அடைந்து விட்டது. இதனால், அவர் கடந்து வந்த துன்பங்களை பற்றி அவரே விவரிக்கிறார். எனது பெரிய அளவிலான மார்பை எனக்கு பிடிக்கவில்லை. எங்கு போனாலும் இடிக்கிறது. படுக்கையில் படுக்கும்போது கூட அவற்றின் எடையால் கழுத்து நெரிக்கும் உணர்வை பெறுகிறேன். அதனால், அறுவை சிகிச்சை செய்து அளவை குறைக்க போகிறேன். அதற்கான நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறேன் என கூறியுள்ளார்.

தனது கணவர் என்பதற்கு பதிலாக அவரை உச்சபட்ச பயனாளி என்றே ஜாஸ்மின் கூறுகிறார். தொடர்ந்து அவர், எனது கணவரின் நண்பர்கள் கூட என்னிடம், நீங்கள் ஏன் ஒன்லிபேன்ஸ் தொடங்க கூடாது? என கேட்கின்றனர். அதன் வழியே பணம் திரட்டலாம் என அறிவுரை கூறுகின்றனர். நான் யோசித்தேன். என்னை காட்சி பொருளாக்க நான் விரும்பவில்லை. எனது உடல் நன்றாக இருக்க அதனை மாற்ற முயற்சிக்கிறேன். அதனை கவர்ச்சி பொருளாக்கி, அதில் இருந்து பணம் கிடைப்பதில் விருப்பம் இல்லை.

இந்த அளவு பெரிய மார்பகங்களால் உடல் வேதனையே ஏற்படுகிறது. உணர்வு சார்ந்த அழுத்தமும், படுக்கையறையில் பாதுகாப்பற்ற உணர்வும் ஏற்படுகிறது. ஆடவர்கள், இந்த அளவு மார்பகம் சரியாக இருக்கும் என்றே கூறுவார்கள். ஆனால், அவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், மேலாடை அணிந்த பின்பு அவர்கள் அதன் வழியே மார்பகங்களை பார்க்கின்றனர். அதனால், அவர்களுக்கு அப்படி தோன்றும். ஆனால், மேலாடை இல்லாதபோது அதனால் ஏற்படும் வேதனையை கூறி விளக்க முடியாது.

தரையை கூட முகம் கொண்டு முழுமையாக பார்க்க முடியாது என ஜாஸ்மின் வேதனையை வெளிப்படுத்துகிறார். குளிர்காலங்களில் ரத்த ஓட்ட நிலை பாதிப்புக்கு ஆளாகின்ற அவர், அதனால் வலி அதிகரிக்கிறது என கூறுகிறார். இதனால், மனம் மற்றும் உடல் சார்ந்த வேதனையை நாளும் எதிர்கொள்கிறார். அவரை மார்பளவை குறைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்படி மருத்துவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக அறிவுறுத்தி வந்துள்ளனர். இதனால், அதற்கான நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள சுகாதாரநலன் சார்ந்த பொது நிதி திட்டத்தின் கீழ் வழியே நிதி பெற முயற்சித்து வருகிறார். எனினும், நிதி பெறுவதற்கான தகுதியை அவர் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவருக்கு கிடைக்க வேண்டிய பணம் வராமல் அதற்காக காத்திருக்கிறார்.

 

CATEGORIES
Share This

COMMENTS