ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல்!சால்வையை மறந்த சசீந்திர ராஜபக்ச

ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல்!சால்வையை மறந்த சசீந்திர ராஜபக்ச

22வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, ​​ராஜபக்ச குடும்பத்திற்குள் எழுந்துள்ள உட்கட்சிப்பூசல் தற்போது பொது வெளிக்கு வந்துள்ளது.

பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி. பதவிகளை வகிக்க முடியாது என்ற ஷரத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பசில் ராஜபக்சவுக்கும், சமல் ராஜபக்சவுக்கும் இடையில் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் சமல் ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச வாக்களிக்கவில்லை.

எனினும் இவ்வாறானதொரு பின்னணியில், அரசியல் பயணங்களின் போது சால்வையை அணிந்து வந்த ஷசீந்திர ராஜபக்ச இன்று முதன்முறையாக சால்வையின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குடும்ப மோதலை வெளிப்படுத்தும் வகையில் மேற்கத்திய உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமை தொடர்பில் எதிர்கட்சியினர் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டதுடன், இதன் மூலம் ராஜபக்ச குடும்பத்தின் ஏற்பட்டுள்ள குழப்பத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு ஷசீந்திர முதன்முதலில் அரசியலில் ஈடுபட்டதுடன், அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் சால்வை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This