அதிபராக யார் இருந்தாலும் வேறுபாடுகளை மறந்து ஆதரவு கொடுக்க வேண்டும் – குமார் வெல்கம

சிறிலங்காவின் அதிபராக யார் பதவியேற்றாலும் கட்சி வேறுபாடுகளை மறந்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என புதிய இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் குமார் வெல்கம வலியுறுத்தியுள்ளார்.
அதிபருக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்காத பட்சத்தில் நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்க முடியாதென குமார் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குவதன் காரணமாக பல தரப்பினரிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க அல்ல. சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார திஸ்ஸநாயக அதிபராக பதவியேற்றாலும் அவர்களுக்கு நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும்.
இலங்கையின் தற்போதைய நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளது. மக்கள் போராட்டங்கள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் வன்முறை செயல்கள் காரணமாக அவர்களின் வருகை குறைவடைந்துள்ளது.
ரஷ்ய போர் காரணமாக பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அந்த நாடுகளில் உள்ளவர்கள் இலங்கை போன்ற நாடுகளுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள திட்டமிடுவார்கள்.
எனினும் இலங்கையின் நிலை காரணமாக அவர்கள் தற்போது வர மறுக்கிறார்கள். தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அதிபருக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும்.
இரண்டு மாத காலத்துக்கு இலங்கையில் எந்தவொரு போராட்டமும் முன்னெடுக்கப்பட கூடாது” – என்றார்.