வவுனியாவில் டிப்பருடன் மோதி பேருந்து விபத்து – 15 பேர் காயம்!

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தங்காலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES செய்திகள்