சர்ச்சையில் சிக்கிய இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல! சுகாதார அமைச்சு விளக்கம்

சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தொடர்பில் நேற்று வெளியான செய்தியை மறுத்து சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
சீதா அரம்பேபொல தனக்கு V8 வாகனத்தை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த போதிலும் அவர் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது அமைச்சின் வசம் உள்ள V-8 காரை சுகாதார இராஜாங்க அமைச்சருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CATEGORIES செய்திகள்