கொழும்பில் முன்னாள் அமைச்சரின் அடாவடித்தனம் – ஊழியர்கள் மீது கடும் தாக்குதல்

கொழும்பில் முன்னாள் அமைச்சரின் அடாவடித்தனம் – ஊழியர்கள் மீது கடும் தாக்குதல்

கொழும்பு 07 பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் பலர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

02 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ள இந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க நேற்று காலை மின்சார சபை ஊழியர்கள் குழுவொன்று சென்றுள்ளனர்..

அரசியல் குடும்பத்தில் இருந்து அதிகாரத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் கட்சி மாறியுள்ளார்.

இந்த நிலையில் மின்சார கட்டணம் செலுத்தாமையினால் அவரது வீட்டின் மின் இணைப்பை துண்டிக்க ஊழியர்கள் சென்றுள்ளனர்.

இதன் போது ஊழியர்கள் பலர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS