ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிள்ளையானின் சகோதரன் – சாணக்கியன் பகிரங்கம்!

ஆட்கடத்தல் தொடர்பாக சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சகோதரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நாட்டிற்கு ஆட்கடத்தலை செய்வது சிவனேசதுரை சந்திரகாந்தனின் சகோதரர் எனவும் இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நாடாளுமன்ற சபையில் சமர்ப்பிக்கின்றேன் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(22) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
“சிவனேசத்துரை சந்திரகாந்தன், அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது கனடாவிற்கு ஆட்கடத்தல் செய்வதாக என் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
ஆனால் கனடாவிற்கு ஆட்கடத்தல் செய்து பணம் உழைக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. சிவனேசத்துரை சந்திரகாந்தன் முன்வைத்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது” எனவும் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அபகரிப்பில் ஈடுபடுவது யார் என்பதை கண்டுபிடிக்க சிறிலங்கா அதிபர் உடனடியாக விசேட குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.