சவூதி அரேபியாவின் வரலாற்று வெற்றி! மகிழ்ச்சியில் மன்னர் வெளியிட்ட அறிவித்தல்

பீஃபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில், “சீ“ குழுவின் நேற்றைய போட்டியில் வெற்றியீட்டியதனை கொண்டாடுவதற்காக சவூதி அரேபியாவில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் சவுதி அரேபியா அணி 2 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் ஆர்ஜண்டீனா அணியை வீழ்த்தியது.
இதற்கமைய, உலக கிண்ண கால்பந்து தொடரில் முதன்முறையாக ஆர்ஜண்டீனா அணி, சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்துள்ளது.
சவூதி அரேபியாவின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அதனைக் கொண்டாடும் வகையில், இன்று (23) சவுதி அரேபியாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையானது பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 1990ம் ஆண்டில் ஆர்ஜன்டீனாவை கமரூன் வீழ்த்திய போது அந்நாட்டில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.