உருகும் பனிப்பாறைகளால் உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

பருவநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகின்றன. பனிப்பாறைகள் உருகுவதால் உண்டாகும் புதிய நுண்ணியிர்களால் புதிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகமயமாக்கல் கொள்கையால் உலகம் முழுவதும் சமனற்ற காலை நிலவி வருகிறது. சுற்றுச் சூழலில் மாற்றம் ஏற்பட்டு பருவநிலை சுழற்சியில் பெரிய குழப்பமே ஏ ற்பட்டடுள்ளது. அதிகப்படியான மழை, வெள்ளம், குளிர் மற்றும் வறட்சி ஆகியவற்றிற்கு இந்த பருவசுழற்சி முரண்பாடே காரணமாகும். சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல நாடுகளில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.
பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து வாழ்நிலம் தண்ணீரில் மூழ்கிடும் அபாயம் ஏற்படும் என்றுதானே பயந்து கொண்டிருந்தோம் . ஆனால் பனிப்பாறைகள் உருகுவதால் வேறு ஒரு ஆபத்தும் ஏற்படலாம் என நம்மை எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆம்… பனிப்பாறைகள் உருகுவதால் புதிய தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பனிப்பாறைகள் உருகி உருவாகும் நீரில் ஏராளமான நுண்ணியிரிகள் இருக்கும். இவை மண்ணுக்கு நன்மை விளைவிக்கும் உயிரியல் மூலக்கூறுகள் தான் என்றாலும், அப்படி உருவாகும் புதிய நுண்ணயிரிகளால் புதிய தொற்று நோய்கள் உருவாகவும் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பல மில்லியின் பனிப்பாறைகள் உருகுவதால் உண்டாகும் தண்ணீரில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. அவை அனைத்துமே நன்மை செய்யும் பாக்டீரியாக்களாவே இருக்கும் என நம்பிக்டைகயாக சொல்ல முடியாது. எக்கோ சிஸ்டத்தின் மூலக்கூறுகாளல் அவை திரிந்து எதிர்வினையாற்றவும் வாய்ப்புள்ளது என்பதே விஞ்ஞானிகளின் வாதம்.
இதே போல் மற்றொரு ஆபத்தும் இருக்கிறது பனிப்பாறை உருகலால். ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் மலைகளில் இருந்து பனிப்பாறைகள் உருகி வரும் தண்ணீரில் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது, ஒரு மில்லி லிட்டர் தண்ணீரில் பல கோடி நுண்ணுயிர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இப்படி பல்கிப் பெருகும் பாக்டீரியாக்களால், ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சத்து 50ஆயிரம் டன் கரியமில வாயு உருவாகுமாம். இது பூமியின வடகோளத்தில் அடுத்த 80 ஆண்டுகளுக்கு நிகழ வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
பனிப்பாறைகள் உருகி உருவாகும் கரியமிலவாயு சுற்றுச் சூழலில் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் எதிர் விளைவுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள, வேல்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆர்வின் எட்வர்ட்ஸ் இது குறித்த கூடுதல் எச்சரிக்கையையும் முன்வைக்கிறார். பெரிய அளவில் பனிப்பாறைகள் உருகுவதால் உலகம் முழுவதுமே உயிரின மூலக்கூறுகளின் மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்கிற எச்சரிக்கிறார் அவர்.
அண்மையில் திபெத் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளின் மேலடுக்குகளில் ஆயிரக் கணக்கில் இதுவரை கண்டறியப்படாத நுண்ணியிரிகள் இருந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது VGP (Vanishing Glacier Project) என்கிற ஆராய்சிச்குழு. எனவே பனிப்பாறைகள் உருகுவதால் உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் பெரிய மாற்றம் ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.