ஆடியோ வெளியீட்டு விழாவில் ஷகீலாவுக்கு அனுமதி மறுப்பு… பரபரப்பைக் கிளப்பிய சம்பவம்!

ஆடியோ வெளியீட்டு விழாவில் ஷகீலாவுக்கு அனுமதி மறுப்பு… பரபரப்பைக் கிளப்பிய சம்பவம்!

ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் பி கிரேட் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.

அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சில தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.

நல்ல சமயம் என்ற படத்தில் நடித்துள்ளார் அவர். இந்த படத்தில் ஷகீலா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோழிக்கோடில் உள்ள வணிக மால்-ல் நடத்த திட்டமிட்டுருந்தனர். அந்த விழாவில் கலந்துகொள்ள சென்ற ஷகீலாவை அந்த மால்-ல் நுழைய மறுத்துள்ளனர். இதனால் அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துள்ளனர்.

இதுபற்றி பேசியுள்ள வணிக வளாக நிர்வாகத்தினர் “பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்தோம்” எனக் கூறியுள்ளது. முன்பு இங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது ஒரு நடிகையிடம் ரசிகர்கள் அத்துமீறி நடந்துகொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS