மன அழுத்தத்தைப் போக்க உதவும் மேஜிக் காளான் !

மன அழுத்தத்தைப் போக்க உதவும் மேஜிக் காளான் !

மன அழுத்தத்தை போக்க உதவும் மூலப்பொருள் மேஜிக் காளானில் இருப்பதாக பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பிரிட்டனில் இருந்து வெளியாகும், தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் மற்றும் நேச்சர் மெடிசின் இதழில் சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சைக்லிடிக்ஸ் என்ற பொருள் மனிதனின் மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. சைலோசைபின் என்பது சைக்லிடிக்ஸின் ஒரு வகையாகும். இது இயற்கையாகவே மேஜிக் காளான்களில் இடம் பெற்றுள்ளது.

இது செரோடோனின் என்ற அமிலத்தை சுரப்பதால், மூளையின் எதிர்ச்செயலை மாற்றி அமைக்கின்றது. இத்தகைய செயல்பாடுகள் கல்லீரலில் நடைபெறுகிறது. இதனால் இதை உபயோகப்படுத்துபவரின் மனநிலை மற்றும் எண்ணங்களை மாற்றும் திறன் உண்டாம்.

மருத்துவத்துறையில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கதாய் உள்ளதாம். புற்றுநோயாளிகளுக்கு பலன் தருவதுடன் போதை அல்லது பதட்டம், மன அழுத்தம் போன்ற பிற கோளாறுகளுக்கும் சைலோசைபின் பயனளிக்கிறதாம்.எதிர்மறை எண்ணங்கள் அதிகளவு கொண்டோருக்கு இது ஒரு மகத்துவமான கண்டுபிடிப்பாகும்.

இருப்பினும் இதனை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்து கொள்ளக் கூடாது. நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள், அறுவை சிகிச்சைக்கு தயாராக இருப்போர், அறுவை சிகிச்சைக்குப் பின்னான சிகிச்சையில் இருப்போருக்கு இந்த மேஜிக் காளான் மிகுந்த பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS