தசைவலி காரணங்களும் நிவாரணங்களும்!

தசைவலி காரணங்களும் நிவாரணங்களும்!

சில நேரங்களில் அதீத உடல் உழைப்பு தசை வலியில் கொண்டு விடும். தசை வலியை மயால்ஜியா என்று அழைப்பர். புதிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நோய் தொற்று, காயம், சுளுக்கு அல்லது பிற உடல் நலப்பிரச்னைகள் வரும் போது உடலின் ஒரு சில பகுதியில் இந்த தசை வலி வரலாம். சில சமயம் தசை வலி தாங்கும் அளவிற்கு இருக்கும்… பல சமயங்களில் மருத்துவரை நாட வைக்கும்

 

இந்த தசை வலி சின்ன குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை மற்றும் யாருக்கும் வரக்கூடும். வாக்கிங், ஜாக்கிங், ஜிம் போன்ற உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, தசை வலி வரும்.
உடற்பயிற்சியல்லாமல் மற்ற காரணதிற்கு வலி வந்தால், அது பிரச்னையினால் கூட இருக்கலாம். எதிர்ப்பு சக்தி இல்லாமல் வரும் நோய்த்தொற்றுகள், காயங்கள், நரம்புத்தசை கோளாறுகள், சளி, காய்ச்சல், மலேரியா, மயோசிடிஸ், லூபஸ் இப்படி பல நோய் அறிகுறியாகவும் தசை வலி இருக்கும்.

உடம்பில் சத்து குறைவதாலும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு எடுத்து கொள்வதாலும் தசைவலி வரும். குறிப்பாக உடல் வலிமைக்கு வைட்டமின் டி மிகவும் அவசியம். இது கால்சியத்தை எலும்பு உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது. அது மட்டுமல்லாமல் தசைகள் மற்றும் எலும்புகளை எதிர்மறையாக பாதிக்கும் ஹைபோகால்சீமியாவை தடுக்க வைட்டமின் டி அவசியம். அதனால் வைட்டமின் டி அதிகம் உள்ள மீன், முட்டை மற்றும் காளான்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துகொள்ளலாம். அதேபோல் உடம்பில் போதுமான அளவு நீர் சத்து இல்லை என்றாலும் தசை வலி வரும். அதனால் தினமும் 8 முதல் 10 டம்ளர் வரை குடித்து தினசரி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்கள் இன்னும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இது மட்டுமில்லாமல் சோர்வு, மன அழுத்தம், தவறான உடல் நிலை (postures) பயன்பாடுகளும் காரணங்கள் ஆகும். இந்த வலியானது வந்த சில நாட்களுக்குள் தானகவே குணமடையாமல் தொடர்ந்தால் அது வேறு உடல் நல கோளாறின் அடையாளமாகக் கூட இருக்கலாம். அதற்கு கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.
சாதாரண தசைவலி போக சில டிப்ஸ்…

• சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்பு போன்ற தசை வலிக்கு, சூடான நீரில் ஒத்தடம் கொடுப்பது மற்றும் ஓய்வு எடுப்பது நிவாரணம் தரும்.
• வலி உள்ள இடத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த ஐஸ் கட்டிகளை வைக்கலாம்.
• எப்சம் உப்பு சேர்த்து சூடான நீரில் குளிக்கலாம்.
• தைலம் கொண்டு மசாஜ் செய்யலாம்.
• தசை வலி நீங்கும் வரை உடற்பயிற்சியை தவிர்க்கலாம்.
• மன அழுத்ததால் தசை வலி வரும்பட்சத்தில் யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
• ஒரு வாரத்திற்கு குறிப்பிட்ட பகுதியில் வலி அதிகரித்து கொண்டிருந்தால் அவசியம் மருத்துவரை நீங்கள் பார்க்க வேண்டும்.

CATEGORIES
Share This

COMMENTS