வறிய குடும்பங்களை ஏமாற்றி சிறுநீரகம் விற்பனை-கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் பெரும் மோசடி

வறிய குடும்பங்களை ஏமாற்றி சிறுநீரகம் விற்பனை-கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் பெரும் மோசடி

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி ஆவணங்கள் ஊடாக இந்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பணம் கொடுத்து சிறுநீரகம் பெற்ற சிலருக்கு பணம் கூட வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This