இந்திய இராணுவத்திற்கு சென்ற திருமண அழைப்பிதழ் – வைரலாகும் பதிவு

இந்திய இராணுவத்திற்கு சென்ற திருமண அழைப்பிதழ் – வைரலாகும் பதிவு

தமது திருமண நிகழ்வில் இந்திய இராணுவத்தை கலந்து கொள்ளுமாறு தெரிவித்து இளம் ஜோடி ஒன்று திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்துள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கேரளாவை சேர்ந்தவர் ராகுல். இவருக்கும் கார்த்திகா என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 10 ஆம் திகதி திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களின் திருமணத்திற்கு முன்பாக ராகுல் மற்றும் கார்த்திகா இருவரும் தங்களின் திருமணத்திற்காக இந்திய இராணுவத்திற்கு தமது திருமண அழைப்பிதழுடன் ஒரு குறிப்பை சேர்த்து அனுப்பி உள்ளனர்.

அந்த குறிப்பில், “நாங்கள் இருவரும் நவம்பர் 10 ஆம் திகதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். உங்களின் தியாகத்திற்கும் நாட்டுப்பற்றுக்கும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் என்றும் எங்களை பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்களால் தான் நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம். எங்களின் அன்பிற்குரியவர்களுடன் நாங்கள் நாட்களை செலவிடுவதற்கு நீங்கள் தான் காரணம். உங்களால் தான் நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். உங்களை எங்களின் முக்கியமான நாளில் அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கண்டிப்பாக நீங்கள் வர வேண்டும். அன்புடன் ராகுல் மற்றும் கார்த்திகா” என எழுதி அனுப்பி உள்ளனர்.

கேரள ஜோடியின் திருமண அழைப்பிதழ் தொடர்பான புகைப்படங்களை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்திய இராணுவம், “உங்களின் திருமணத்திற்க்கு இந்திய இராணுவத்தை அழைத்ததற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். மேலும் உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாழ்த்துகிறோம்” என வாழ்த்தி குறிப்பிட்டுள்ளனர். நாட்டை பாதுகாக்கும் இராணுவத்தினரை தங்களின் திருமணத்திற்கு ஒரு ஜோடி அழைத்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

CATEGORIES
Share This

COMMENTS