தவறான அறுவை சிகிச்சை! சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர்

போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இந்தியாவில் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறு காரணமாக சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை தவறானமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இது தொடர்பில் எந்த ஒரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இதற்கிடையில்,பந்துல குணவர்தனவினால் நடத்தப்பட்ட வெகுஜன ஊடகத்துறை அமைச்சராக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES செய்திகள்