மத்திய வங்கியின் ஆளுநராக அரசியல் நண்பரை நியமிக்க முயற்சி! நாடாளுமன்றத்தில் அம்பலம்

மத்திய வங்கியின் ஆளுநராக அரசியல் நண்பரை நியமிக்க முயற்சி! நாடாளுமன்றத்தில் அம்பலம்

மத்திய வங்கியின் ஆளுநராக அரசியல் நண்பர் ஒருவரை நியமிக்கும் திட்டம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநராக பிணைமுறி மோசடிக்கு காரணமான ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மறைமுகமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அந்த தகவலை மறுத்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அரசாங்கத்திடம் அவ்வாறான எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This