மக்கள் அறிந்திராத பல அரசியல் இரகசியங்களை புத்தகமாக வெளியிடும் முன்னாள் ஜனாதிபதி

மக்கள் அறிந்திராத பல அரசியல் இரகசியங்களை புத்தகமாக வெளியிடும் முன்னாள் ஜனாதிபதி

மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கம் கொழும்பு-மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து தாம் வெளியேறியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்திய போதும் தாம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு பல நிகழ்வுகள் காரணமாக இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை மக்கள் அறியாத உண்மைகளுடன் புத்தகம் வெளியான பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This