கைது செய்யப்பட்ட உரிமையாளரை தேடி பொலிஸ் நிலையம் சென்ற நாய்

கைது செய்யப்பட்ட உரிமையாளரை தேடி பொலிஸ் நிலையம் சென்ற நாய்

புலத்சிங்கள பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது உரிமையாளரை தேடி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நாய் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் சிறைக்கூண்டுக்கு அருகில் நாய் ஒன்று நிற்பதனைக் கண்ட பொலிஸார் அதனை விரட்டியுள்ளனர். இருப்பினும் அந்த நாய் வெளியே செல்லாது பொலிஸ் நிலையத்துக்குள்ளே பதுங்கியிருந்துள்ளது.

இதனைக் கண்ட பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் சிறைக்கூண்டில் வைக்கப்பட்டிருந்த நபரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் என்பது தெரியவந்துள்ளது.

புலத்சிங்கள பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை கைது செய்து வாகனத்தில் அழைத்து வரும்போது குறித்த நாயும் சுமார் கிலோ மீற்றருக்கும் மேலாக வாகனத்தை பின் தொடர்ந்து வந்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த வளர்ப்பு நாய் இரும்புக்கம்பிகள் வழியாக உரிமையாளரை பார்த்துக்கொண்டிருந்ததினை அவதானித்து பொலிஸார் நாயையும் கூண்டுக்குள் விட்டு அடைத்துள்ளனர்.

CATEGORIES
Share This